ஒரு கோடி ரூபாய் புரூடா : லாரன்ஸ் வழியில் ரஜினி?!

0
1662

நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கத் தயாராக இருப்பதாக சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

அண்மையில் ரஜினிகாந்தைச் சந்தித்த அய்யாக்கண்ணு, தான் தருவதாகச் சொன்ன  ஒரு கோடி ரூபாயைத் தருகிறேன் என ரஜினிகாந்த கூறியதாகவும், தான்தான் அதனைப் பெற மறுத்து பிரதமரிடம் கையளிக்கக் கூறிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால்,  இதுகுறித்து கடந்தாண்டு தஞ்சாவூரில் பேட்டியளித்த ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாரயணா, அத்தொகையை 15 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினிகாந்த் வங்கியில் செலுத்திவிட்டதாகக் கூறியிருந்தார். இதனால், இவ்விரு செய்திகளில் எது உண்மை என்ற கேள்வி இப்போது வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. சத்யநாராயணா கூறியது உண்மையா? அய்யாக்கண்ணு கூறியது உண்மையா? பணம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டதா? இன்னும் இல்லையா? என்ற விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஒரு கோடி ரூபாய் அளித்ததாக ஏறகனவே நடிகர் லாரன்ஸ் கூறி அது பெரும் விவாதப் பொருளாகி, அதற்கான ஆதாரமே இன்னமும் கிட்டாதநிலையில், ரஜினிகாந்தின் ஒரு கோடி ரூபாய் இப்போது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஒரு கோடிப்பே!

LEAVE A REPLY