காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுக்க காரணம் என்ன? என தமிழக அரசுக்கு சீமான் கேள்வி

0
1355

சென்னை நடுக்குப்பம் மீனவர் பகுதி மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று 27-01-2017 காலை 9 மணியளவில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் சென்னை மெரீனாவில் அறவழியில் போராட்டத்தை தொடங்கினார்கள். அப்போராட்டத்தை திட்டமிட்டு அரசும், காவல்துறையும் ஒரு வன்முறை களமாக மாற்றி நிறுத்தியிருக்கிறது. வேர்வையில் தொடங்கிய இந்த போராட்டம் இரத்தம் சிந்தும் போராட்டமாக முடிக்கப்பட்டுள்ளது.

23ஆம் தேதி மாலையில் சட்டம் இயற்றுவதற்கு முன்னதாக காலையில் இந்த தடியடி நடத்த வேண்டிய அவசியமே இல்லை.
சட்டம் இயற்றிய பிறகு அதை பேசுவதற்கு அரிபரந்தாமன் போன்ற ஓய்வு பெற்ற நீதி அரசர்களை, சங்சர சுப்பு போன்ற சட்ட வல்லுநர்களை பயன்படுத்துகிற இவர்கள், முன்கூட்டியே இவர்கள் தலைமையிலான ஒரு குழுவை அமைத்திருக்கலாம். போராட்டக்கார்களுடன் மாவட்ட ஆட்சியரோ, அமைச்சர்களோ, முதல் அமைச்சரோ பேச வரவில்லை. அப்படியிருக்கும்போது அந்த குழுவினர்கள், போராட்டக் குழுவினருடன் பேசியிருந்தால், தமிழக அரசுக்கும், போராட்டக் குழுவினருக்கும் இவ்வளவு பெரிய இடைவெளி வந்திருக்ககாது.

அதைவிடுத்து திட்டமிட்டு மாணவர்களை அடித்து, பெண்களை நிர்வாணப்படுத்தி, கர்ப்பிணி பெண்களை அடித்து, குழந்தைகளை அடித்து அவ்வளவு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அறவழியில் போராடியவர்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுக்க காரணம் என்ன? என தமிழக அரசுக்கு சீமான் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY