தமிழ்த்தேசியமும் திராவிடமும் – ஒரு பார்வை

0
4508

தமிழ்த்தேசியமும் திராவிடமும் – ஒரு பார்வை
———————————————
தமிழ்த்தேசியம்னு சொன்னதுமே திராவிடகட்சிகளுக்கு பதற்றமாகிறது! குறிப்பா திமுகவினருக்கு!!!

தமிழ், தமிழரென பேசுவது இனவாதம், இந்திய ஜனநாயக நாட்டில் யாரும் எங்கும் வாழலாம்!

தமிழ் தேசியம் என்பது இனவாதமல்ல, அது இந்த மண்ணின் மைந்தர்களின் உரிமை. ஆம், நம் நாட்டில் யாரும் எங்கும் வாழலாம்! ஆனால் எம்மண்ணில் நாமே ஆள்வோம், இது எமது முழக்கம்! நாம் அடிமை இனமாக இருந்தது போதும், அதிகாரத்தை கைப்பற்றியே ஆகவேண்டிய நிலையில் உள்ளோம்.

வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு – எமது இனத்தின் பெருமை
ஆளும் உரிமை தமிழனுக்கே உண்டு – எமது இனத்தின் அடிப்படை உரிமை

பல தலைமுறைகளாக இங்கு வாழும் மற்ற மொழியினர் தமிழகத்தை விட்டுவெளியேறனுமா?

இங்கு யாரும் வந்து வாழலாம் ஆனால் ஆள்வது தமிழனாக இருக்க வேண்டும் என்று சொல்வது எப்படி தவறாகும்?
விருந்தினராக வா வாழு! ஆனா என் வீட்டில் வந்து என் குடும்பத்துக்கு நீ தலைவனா இருப்பேன் என்று சொல்வது என்ன நியாயம்? அதை நானும் பார்த்துக்கிட்டிருந்தா என்ன அர்த்தம். என் வீட்டில் நான் தலைவனா இருக்கனும்னு சொல்வது எப்படி பாசிசமாகும், இனவாதமாகும். இது என் அடிப்படை சனநாயக உரிமை, இதுதான் நியாயம்.

எல்லோரும் ஒன்றாக நிற்போம்!
தமிழன் தான் முன்னால் நிற்பான்! – சீமான்

பிறப்பால் இனவாதம் பேசுவதா தமிழ் தேசியம்?

சீமான் டிஎன்ஏ டெஸ்ட் பண்ணப்போறாரு, தமிழரல்லாதோர் வெளியேற வேண்டியதுதானான்னு புரட்டு வாதம் வைக்கிறாங்க திராவிட கட்சியினர்!
தமிழ் தேசியம் பிறப்பால் இனவாதம் பேசுவதன்று, தமிழை தாய் மொழியாகவும், வாய் மொழியாகவும் கொண்டுள்ள, தமிழ்மொழி உணர்வுள்ள, தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் உண்மையாக உள்ள அத்துனைப்பேரும் தமிழர்களே!
இதில் பிரச்சனை எங்க இருந்து வந்துச்சு? இது யாருக்கு ஆபத்தாகும்? நாம் இருப்பது தமிழ்நாடு, இருப்பது தமிழ் மக்கள்! அப்ப தமிழ் தேசியம் பேசாமல் தெலுங்கு தேசியமா பேசமுடியும்? மற்ற திராவிட மாநிலங்களில் (ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில்) திராவிடம் பேச முடியுமா?

அப்படியில்லை தமிழ் நாட்டை பொறுத்தவரையில் திராவிடம் = தமிழ்! அப்படி தான் எடுத்துக்கனும்!

ஏன் அப்படி எடுத்துக்கனும்? தலையை சுத்தி எதுக்கு மூக்க தொடனும்? தமிழை தமிழ்ன்னு சொல்லுங்க,எதுக்கு திராவிடம்னு சொல்லனும். ஏன்னா அப்பத்தான் தமிழ் நாட்டில் தமிழரல்லாதோர் திராவிடத்தின் பின்னால் ஒளிந்து, தமிழரை அடிமையாக்கி ஆள் முடியும். இத்தனை திராவிட கட்சிகளில் ஒரு தமிழன் தலைவனா இருக்கானா! (அண்ணன் கொளத்தூர் மணியை சொல்லுவாங்க, அவரும் அரசியல் விடுதலைக்காக கட்சி நடத்தல)

தமிழ் – தமிழம் – திரமிளம் – திராவிடம் என்று திரிந்ததாம்!

நாம் திரிந்த பாலையே பயன்படுத்த மாட்டோம்; பின்னர் ஏன் திரிந்த சொல்லை பயன்படுத்த வேண்டும் – சீமான்

பெரியாரின் திராவிடத்திற்கு எதிரானதா தமிழ் தேசியம்?

இல்லை! இல்லாத திராவிடத்தை அரசியலாக்கி ஓட்டு வாங்க நினைக்கும் கட்சிகள், தங்கள் போலித்தனத்தை மறைக்கவே தமிழ் தேசியம் மீது இவ்வாறான திசை திருப்பல்களை செய்கின்றனர்.

பெரியாரின் திராவிடம்

அன்றைய காலகட்டத்தில் (1990–1940) கோவில் பிரவேசம், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் பார்ப்பனர் ஆதிக்கம் இருந்தது. மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 2 சதவீதமே உள்ள பார்ப்பனர்கள் 80% மேலான கல்வி வேலைவாய்ப்புகளை ஆக்கிரமித்திருந்தனர். மக்கள் தொகையில் 98% உள்ள பார்ப்பனர் அல்லாதோரில் 20 சதவீதத்தினருக்கு மட்டுமே கல்வி வேலைவாய்ப்பு கிட்டியது. கல்வி அறிவு இல்லாததே காரணமாக சொல்லப்பட்டது. இந்த 20 சதவிகிதத்தில் கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர், இஸ்லாமியரும் அடக்கம். இதனை சமன்படுத்த வேண்டியும், அனைத்து சமுதாயத்தினரும் பயன்பெற வேண்டியுமே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இதில் தான் பார்ப்பனர் (Brahmin) — பார்ப்பனர் அல்லாதோர் (Non-Brahmin) என இரு பிரிவுகள் உருவாகியது. பார்ப்பனர் அல்லாதோருக்கு வகுப்புவாரி இட ஒதுக்கீடு தரக்கூடாது அது இனவாதமென அன்றைய காங்கிரஸ் இதை எதிர்த்தது. அதற்கு காரணம் காங்கிரஸில் இருந்த பார்ப்பன ஆதிக்கம் தான். அதன் வழி வந்தது தான் நீதிக்கட்சி, சுய மரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என்பதெல்லாம்.
(குறிப்பு: குடி அரசு பிப்ரவரி 16, 1936 — காங்கிரசும் வாலிபர்களும் தலையங்கத்தின் ஒரு பகுதி)
எனவே, பார்ப்பனர் — பார்ப்பனர் அல்லாதோர்; பார்ப்பனர் = ஆரியர், ஆரியருக்கு எதிர்பதம் திராவிடர், எனவே திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது. இது திராவிட மொழிகளையோ, திராவிட தேசியமெனவோ குறிப்பதாகாது. அது இனவாதமும் இல்லை, சமூக நீதி.

இன்றைய திராவிட கட்சிகளின் நிலை

எப்பொழுதெல்லாம் கருணாநிதி தாக்கப்படுகிறாரோ அப்பொழுதெல்லாம் மட்டும் பெரியார் கேடயமா தேவைப்படுவார்!
ஆனால் பெரியார் பேசிய திராவிடத்திற்கும் இப்போதிருக்கும் திராவிட அரசியல் கட்சிகளுக்கும் என்ன சம்பந்தம்? அவர் பேசிய பகுத்தறிவோடு தான் இப்போது செயல் படுகின்றனரா?!
பதவி, ஓட்டு அரசியலுக்காகவும் திராவிடத்தையும் பெரியாரையும் கேடயமாக பயன்படுத்தும் இவர்கள் தமிழ் தேசியத்தை இனவாதமென கூறலாமா? திக, திமுக பேசும் திராவிடம் சமூக நீதியாம்! தமிழ்த்தேசியம் பேசுவது பாசிசமாம், இனவாதமாம்!

ஏன் குறிப்பா திக, திமுக’ன்னா அவங்க தான் தமிழ் தேசியம்னாலே பதறாங்க!! அதிமுகவில் திராவிடம்,பெரியாரிசம் என்றும் இருந்ததில்லை.
தமிழ் தேசியம் என்ற வார்த்தை கேட்டால் ஏன் அப்படி ஒரு கசப்பு?
ஆதித்தனார், ஈவிகே சம்பத் பேசியதாலா?!
மொழிப்போர் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அதையே எதிர்ப்பது எவ்வளவு பெரிய அய்யோக்கியத்தனம்.
தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கிப்போடுங்கள்னு சொல்லுவோம்.. ஏன் திராவிடர்களே திராவிடர்களேன்னு சொல்ல வேண்டியது தானே?
கட்சிப்பெயர் திராவிட முன்னேற்ற கழகமாம், அதன் தலைவர் தமிழினத்தலைவராம், ஏன் திராவிட இனத்தலைவர்னு சொல்லலாமே! திராவிடம் இன்னும் இருக்குல்ல!!!?

தலைநில குறிஞ்சியின் தலைவன் முப்பாட்டன் முருகன்

அண்ணன் சுப.வீரபாண்டியன், சொல்றாரு திடீர்னு வேல தூக்கிக்கிட்டு சிலர் முருகனை முப்பாட்டன்னு சொல்றாங்க, திடீர்னு எப்படி தெரிஞ்சதுன்னு கேட்கிறார். இதில் எந்த குழப்பமும் இல்லை, கடவுள் மறுப்பில் பெரியாரிய கொள்கையை கொண்டது தான் நாம் தமிழர் கட்சி, அப்புறம் எப்படி முருகன் வந்தார்னா? முருகனை கடவுளாக பார்க்கவில்லை, அவன் நமது முன்னோராக பார்க்கிறோம்னு பொருள். முன்னோர்களை (நடுகல்) வழிபடுவதுதானே தமிழரின் வரலாறு, பண்பாடு!

முருகன் தலைநில குறிஞ்சியின் தலைவன், அவன் ஒரு தேசிய இனத்தின் அடையாளம்!

ஒரு நிலப்பரப்பை மட்டும் மீட்பது புரட்சியும், போரும் அல்ல, அவனுடைய மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரிய வேளாண்மை, அவனுடைய வழிபாட்டு முறையும் சேர்த்து மீட்பது தான் புரட்சி, அதுதானே முழுமை. இது ஹிந்து மதமே அல்ல! தமிழர் அடையாளம்! இதை சுப.வீ அல்ல! வேறெந்த பகுத்தறிவாளரோ, வரலாற்றாய்வாளர்களோ இல்லைன்னு சொல்ல முடியுமா!?
(குறிப்பு: The smile of Murugan on Tamil literature of South India
Book by Kamil Zvelebil)
இதில் உடன்படாத வேற்று சமயம் சார்ந்த மக்கள், அரசியலில் எம்மோடு சேர்ந்து பயனிப்பர், இறைவழிபாடு தனி நபர் விருப்பம், அவர்களின் உரிமை அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. அந்த அடிப்படைக்கூட உணராத கட்சி நாம் தமிழர் அல்ல!

ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்!

கடவுளே இல்லைன்னு சொன்ன பெரியாரின் சீடர்கள், ஓட்டுக்காக ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்’ன்னு சொல்லிக்கிட்டாங்க! யாரந்த தெய்வம் திடீர்னு எங்கிருந்து வந்துச்சுன்னு கேட்டா பதில் இல்ல!

கிறுஸ்துமஸ், ஈஸ்டர், ரம்ஜான், மிலாது நபிக்கெல்லாம் முதல் ஆளா வாழ்த்து சொல்றது என்ன?! வெறும் மத நல்லணிக்கமா?!
முருகனை முப்பாட்டன்னு சொன்னா பகுத்தறிவு இல்லைன்னு சொன்ன, முழு நேர திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களாகவே செயல்படும் ஆசிரியர் கி.வீரமணி, சுப.வீ’யும் இதைப்பத்தியெல்லாம் கருணாநிதியிடம் சொல்வார்களா? இல்லை அவர் மஞ்சள் துண்டைப்பத்தி தான் கேட்பார்களா?!

இராமர் என்ன இஞ்ஜினியாரான்னு கேட்கும் போதும், ஹிந்து என்றால் திருடன் என்று பொருள் என சொல்லும்போது மட்டும் பகுத்தறிவு வேலை செய்யுமா? அதற்கு எதிர்ப்பு வந்ததும், நான் அந்த பொருளில் சொல்லல, மனதை திருடும் திருடன்னு சொன்னது யாரு?!

திமுக ஹிந்துக்களுக்கு எதிரியல்ல, 90% ஹிந்துக்கள் கொண்ட கட்சின்னு ஸ்டாலின் சொன்னது பகுத்தறிவா? மத நல்லிணக்கமா? சந்தர்ப்பவாதமா?! இதை கேட்டா பகுத்தறிவு சிரிப்பாய்ச் சிரிக்கும்!
ஹிந்து கோவில்கள் பொருளீட்டும் நிறுவனமாகிப்போன நிலையில் அதை மாற்ற திராவிடம் என்ன செய்ததுன்னு கேட்டால் பதில் இருக்காது.

ஹிந்து மதத்திற்கும் தமிழர் வழிபாட்டுக்கும் என்ன சம்பந்தம் என எப்போதாவது சொன்னதா திராவிடம்? ஏன் சொல்லல? அதில் ஆதாயம் அடைந்தது யார்?

பெரியாருக்கு எதிரானதா தமிழ்த்தேசியம்?

நாம் தமிழர் கட்சி பெரியாரை தலைவராக ஏற்கவில்லை, அதே சமயம் அவருக்கு எதிராகவும் பேசவில்லை. பெரியார் கொள்கைரீதியான வழிகாட்டி! பெரியார் என்பவர் தமிழ்த்தேசிய இன மக்களின் போற்றுதலுக்குறியவர் அவரை புறந்தள்ளிவிட்டு ஒரு அரசியல் மாற்றத்தை, அரசியல் புரட்சியை செய்துவிட முடியாது. பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, சமூக நீதி, பெண்ணிய உரிமை இதில்லாமல் எந்த தேசிய இனமும் எழுச்சிபெற, உயர்வு பெற, முழுமை அடைய இயலாது.

ஆரியத்தை மீண்டும் நிலை நாட்டுவதா தமிழ்தேசியம்?

இல்லை, தமிழை தாய்மொழியாகவும், வாய்மொழியாகவும் கொண்டுள்ள அனைவருமே தமிழர்கள். தமிழரில் சாதிய பாகுபாடே இல்லை என்பதே உண்மை.

இதில் திராவிட அரசியல்வாதிகளுக்கு திடீர்னு சந்தேகம் எங்க வந்துச்சு?
மக்கள் தொகையில் 2% உள்ள பார்ப்பனரை எதிரியாக காட்டி, 98% மக்களின் ஓட்டுக்களைப்பெற செய்யப்படும் பதவி வெறி அரசியலே திராவிடம்! இப்ப தமிழ்த்தேசியத்தில் அவர்களையும் தமிழன்னு சொன்னதும் வலிக்குது!

பிறப்பால் உயர்வு தாழ்வு கூடாது என்று போதித்த பெரியாரின் சீடர்கள் தான் இன்று பிறப்பிலே பார்ப்பனன் என்று ஒதுக்கிவைக்கின்றனர்.

இங்க தான் திராவிட சிகாமணிகளின் போலித்தனத்தை பார்க்கனும், தமிழ்த்தேசியமென்பது பிறப்பால் இனவாதம் பேசுவது அது பாசிசம்னு சொல்றவங்க கிட்ட, அப்ப ஆரியம் திராவிடம் இனவாதமில்லையா? அது எதுல வரும்? அதென்ன முடக்குவாதமா? பக்கவாதமான்னு கேட்டா.. விருட்டுன்னு எழுந்து போயிடுவாங்க! ஏன்னா அதான் அவர்களின் பிழைப்புவாதம்! பொழைப்புல மண் அள்ளி போட்டா எப்படி..:-)))

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானதா தமிழ் தேசியம்?

திராவிட அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களின் தாழ்த்தப்பட்டவர்களின் அரசியலை புரிந்து கொள்ளலாம். ஒரு தொகுதி மக்களின் பெரும்பான்மை சாதி எதுவோ, அந்த சமூகத்தை சேர்ந்தவர் தான் அதன் வேட்பாளர்.

தனித்தொகுதி தவிர்த்து தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை வேறு எந்த தொகுதிக்காகவாவது எந்த திராவிட கட்சியாவது அறிவிக்குமா!? ஆனால் ஆதித்தமிழ்குடிகளுக்கு முன்னுரிமை என்றும், பொது தொகுதியிலும் ஆதித்தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுத்து மாற்றத்திற்கான மக்களின் புரட்சியை நாம் தமிழர் கட்சியை தவிர வேறு யாரும் முன்னெடுக்கவில்லை.

50 ஆண்டுகளாக திராவிடம், பகுத்தறிவு பேசிய, சாதி சங்கங்களை வளர்த்தெடுத்த திமுக அதை செய்யுமா!?

தமிழ்நாட்டை தாண்டி மற்ற மொழி மாநிலங்களில் திராவிடம் பேச முடியுமா!

கன்னடன் கன்னடனாகவே இருக்கும்போது, தெலுங்கன் தெலுங்கனாகவே இருக்கும்போது, மலையாளி மலையாளியாகவே இருக்கும்போது தமிழன் மட்டும் ஏன் திராவிடனாக திரிந்துப் போகவேண்டும்!
– சீமான்

ஒரு தமிழன் வேறு மாநிலத்தில் அதிகாரத்தில் அமர முடியுமா?
ஆனால் தமிழ்நாட்டில் இதெல்லாம் முடியும் ஏனெனில் திராவிடம் என்கிற பெயரில், தமிழனின் இனஅடையாளத்தை மறக்கடிச்சிருக்காங்க தமிழர்களுக்கு சாதி, சமய வெறியும் மது, சினிமா போதையும் திட்டமிட்டு புகட்டி மொழிப்பற்றும், இனப்பற்றும் தலைத்தூக்க விடாமல் தடுக்க கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டிருக்கின்றன திராவிட கட்சிகள்.

வென்றாக வேண்டும் தமிழ் – அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்!

இன உணர்வும், மான உணர்வும் கொண்டு, தமிழ்ப் பிள்ளைகள் நாம் கிளர்ந்தெழுவோம் இன விடுதலைக்காக!

இனம் ஒன்றாவோம்!
இலக்கை வென்றாவோம்!

நாம் தமிழர்!


ஆயிரத்தில் ஒருவன்
https://twitter.com/SriLiro
@SriLiro

LEAVE A REPLY