ரஜினிகாந்துக்கு சுப.உதயகுமார் நேரடிச்சவால்!

0
1349

ரஜினிகாந்துக்கு சவால் விடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அப்பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திரு. ரஜினிகாந்த் அவர்களின் கட்சியில் இணைகிறேன்!

() ஒரு வெற்றுத் தமிழக வரைபடத்தில் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் திரு. ரஜினிகாந்த் அவர்கள் சரியாக அடையாளப்படுத்துவாரா?
() நெடுவாசல், வடகாடு, கதிராமங்கலம், திட்டக்குடி போன்ற ஊர்கள் பற்றி ஐந்து, ஐந்து வரிகள் எழுதித் தருவாரா?
() எங்கள் இடிந்தகரைப் பள்ளி மாணவி ஒருவரோடு கூடங்குளம் அணுமின் திட்டம் பற்றி ஐந்து நிமிடம் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் விவாதிப்பாரா?
() கெய்ல், என்.பி.சி.ஐ.எல்., ஓ.என்.ஜி.சி., மாப்ஸ், ஐ.என்.ஓ. இவையெல்லாம் என்னவென்று சொல்லி, இரண்டிரண்டு வாக்கியங்கள் பேசுவாரா?

இவற்றைச் செய்தால், அவரும், ஆண்டவனும் சேர்ந்து துவங்கப்போகும் கட்சியில் இணைந்திட அணியமாய் இருக்கிறேன் நான்.

LEAVE A REPLY