விகடனுக்கு லாரன்ஸ் ஒரு கோடி கொடுக்கவில்லை? : கசப்பான உண்மை!

0
12992

விகடன் மூலம் சமூக சேவைக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கியது குறித்த உண்மை வெளிபட்டிருக்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்இளங்கோ கல்லாணை அவர்கள் இட்டிருக்கும் முகநூல் பதிவு…

ஒரு முறை எழுத்தாளர் மணிகண்டன் தனக்கு ஒரு லட்ச ரூபாய் தருவதாகச் சொன்ன ராகவா லாரன்ஸ் தரவில்லை என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். ஆனந்தவிகடனில் நூறு பேருக்கு ஒரு லட்சம் வீதம் மாதிரி இளைஞர்கள் சமூக ஆர்வலர்களுக்குத் தருவதாகத் தொடர்ந்து வந்தது. எனக்கும் முத்துகிருஷ்ணனுக்கும் அழகேசபாண்டியனுக்கும் பாமயனுக்கும் மற்றும் பலருக்கும் தரப் போவதாகச் சொன்னார்கள். ஆனந்த விகடன் தன்னுடைய புகைப்பட நிருபரை என்னுடைய வீட்டுக்கு அனுப்பி படம் எடுத்துக் கொண்டார்கள். என்னிடம் போனில் என்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டார்கள். ஒரு லட்ச ரூபாயை எப்படி செலவு செய்வீர்கள் என்று கேட்டார்கள். இயற்கை வேளாண்மைத் துறையில் உள்ள அறிவுசார் வேலைகளுக்குப் பயன்படுத்துவேன் என்று சொன்னேன். இப்படி எல்லா நண்பர்களும் தங்களுடைய வேலைகளைப் பற்றிச் சொன்னார்கள். ஆனந்த விகடன் என்பதால் அப்போது ஒத்துக் கொண்டு பேசினேன். அந்த பத்திரிக்கையில் என் படத்தோடு வந்தது,. என் நண்பர்கள் யாருமே அந்தப் பணத்தை வாங்கியதாக தகவல் இல்லை.

ஒரு கோடி ஒரு லட்சம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே , யாராவது நல்ல மனுஷருக்குக் கொடுத்திருப்பார் போல என்று விட்டுவிட்டேன். இந்தப் போராட்டத்திலும் அதே கதையைச் சொல்கிறாரே.
எனக்கு சினிமா மேல் பல காலமாகவே ஒவ்வாமை. அதில் பொழுதுபோக்குத் தொழில் என்று பல அம்சங்கள் இருந்தாலும் என்னுடைய துறை அதுவல்ல.ஒவ்வமைக்குக் காரணம் விளம்பரமும் மக்களின் எதிர்வினையும். எனவே சினிமா சம்பந்தமாக யார் என்ன சொன்னாலும், அப்படியே கழண்டு கொள்வது வழக்கம். விவசாயம் பண்ண ஒரு ஆள்கிட்ட கடனை வாங்கி இன்னொரு ஆளுக்கு கொடுத்துக்கிட்டு பிழைப்பு ஓடுது. இவங்க யார்றான்னு பாத்தா ஒன்னும் புரியல.

இப்போது ராகவா லாரன்ஸ் கேட்கிற கேள்விக்கெல்லாம் நான் சோறு போட்டேன் என்று சொல்கிறார். இவருடைய நோக்கமென்ன? போராட்டத்தை தானே நடத்தினேன் என்று சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம், ஆனால் ஊடகங்களிலும் அரசியல்வாதிகளிடம் அவர் காட்டும் விசுவாசமும் கடும் எரிச்சலை உண்டு பண்ணுகிறது. இவர் ஒரு சிக்கல் பிடித்த ஆள் போல் தெரிகிறது. யாராவது அவரிடம் உதவி பெற்றிருந்தால் தெரிவியுங்கள். அது வரை யோசிங்க.

LEAVE A REPLY